சென்னை, ஆக.5: மயிலாப்பூர் மற்றும் தண்டையார்பேட்டை கோட்டங்களுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மயிலாப்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.சாலையில் உள்ள வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலையத்திலும் (மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில்), தண்டையார்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட டி.எச்.ரோட்டில் அமைந்துள்ள தண்டையார்பேட்டை மின்வாரிய அலுவலகத்திலும் நாளை காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் மின் சார்ந்த பிரச்னை மற்றும் சந்தேகங்களை தெரிவித்து அதற்கான விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மயிலாப்பூர், தண்டையார்பேட்டை பகுதிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.