அரியலூரில் முதிர்வடைந்த காவல் வாகனங்கள்

அரியலூர், ஆக. 4: அரியலூர் மாவட்டத்தில் முதிர்வு பெற்ற காவல் வாகனங்கள் வரும் 8ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவில் முதிர்ந்த நிலையில் உள்ள கழிவு செய்யப்பட்ட 8 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் என 11 காவல் வாகனங்கள் வரும் 7 ம் தேதி காலை 10 மணி முதல் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அன்று, காலை 8 முதல் 10 மணிக்குள் 1,000 ரூபாய் முன் வைப்புத் தொகையை செலுத்தி தங்கள் பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்டவர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளமுடியும். கலந்து கொள்பவர் தங்களது ஆதார் அட்டை நகல் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும். மேலும், வாகனங்களை ஏலம் எடுத்த நபர்கள் மாலைக்குள் ஏலத் தொகையை ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால், முன்பணம் திருப்பி தரமாட்டாது. வாகனத்துடன் ஏலம் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும், வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. வாகனங்களை ஏலம் நடைபெறும் தேதி அன்று காலை 8 மணி முதல் பார்வையிடலாம். ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரியலூரில் முதிர்வடைந்த காவல் வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: