பெரம்பலூர் அருகே பலத்த சூறைக்காற்று வீட்டின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது: அதிர்ஷ்டவசமாக உரிமையாளர்கள் உயிர் தப்பினர்

 

பெரம்பலூர், ஆக. 31: பெரம்பலூர் அருகே பலத்த சூறைக் காற்றுக்கு வீட்டின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை தூக்கியெறியப்பட்டது. அதிர்ஷ்டவசமாக வீட்டின் உரிமையாளர்கள் உயிர் தப்பினர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா, அரும்பாவூர் கிராமம் பெரியசாமி கோயில் காட்டு கொட்டாய் பகுதியில் நேற்று முன்தினம் (29ம் தேதி) மாலை 5.30 மணியளவில் சூறைக்காற்றுடன் மழை கொட்டியது.

அப்போது அடித்த பலத்த காற்றில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் -கலைவாணி தம்பதியினரின் குடியிருப்பின் ஆஸ் பெட்டாஸ் மேற்கூரை, அப்படியே தூக்கி வீசப்பட்டது. இதனால் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறி அருகிலுள்ள பகுதியில் தஞ்சமடைந்தனர். சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் விஏஓ கொடுத்த புகாரின் பேரில் வேப்பந்தட்டை தாசில்தார் மற்றும் அரும்பாவூர் போலீசார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பெரம்பலூர் அருகே பலத்த சூறைக்காற்று வீட்டின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது: அதிர்ஷ்டவசமாக உரிமையாளர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: