சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, 2009ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கியது. இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த உள்இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அருந்ததியர் உள்இடஒதுக்கீடு வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. அதிமுக அரசு, அருந்ததியர் மக்களுக்கான உள் இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய ஆதிதிராவிடர் நலச் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின்படி அரசு சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு திறம்பட கருத்துக்களை எடுத்துரைக்கப்பட்டது.
2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டிற்கு சாதகமான இடைக்கால தீர்ப்பை வழங்கியது.பின்பு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், எஸ், எஸ்டி பிரிவில் உள்இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்’ என்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும், அதிமுக சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
The post அருந்ததியர் உள்இடஒதுக்கீடு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு எடப்பாடி நன்றி appeared first on Dinakaran.