முதல் ஒருநாள் போட்டி இந்தியா – இலங்கை ‘டை’

கொழும்பு: இந்தியா – இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி, இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி சரிசமனில் (டை) முடிந்தது. ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 230 ரன் குவித்தது. வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 67 ரன் (65 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். நிசங்கா 56 ரன் (75 பந்து, 9 பவுண்டரி), லியனகே 20 ரன், ஹசரங்கா 24 ரன், அகிலா தனஞ்ஜெயா 17 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் அர்ஷ்தீப், அக்சர் தலா 2, சிராஜ், துபே, குல்தீப், வாஷிங்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 47.5 ஓவரில் 230 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் ரோகித் 58 ரன் (47 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), கில் 16, கோஹ்லி 24, ஷ்ரேயாஸ் 23, ராகுல் 31, அக்சர் 33, துபே 25 ரன் எடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் ஹசரங்கா, அசலங்கா தலா 3, வெல்லாலகே 2, அசிதா, அகிலா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளும் தலா 230 ரன் எடுத்ததால் இப்போட்டி ‘டை’ ஆனது. ஐசிசி விதிமுறைப்படி, இது பல அணிகள் பங்கேற்கும் டோர்னமென்ட் இல்லை என்பதால் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்படவில்லை. 2வது போட்டி நாளை பிற்பகல் 2.30க்கு தொடங்குகிறது.

The post முதல் ஒருநாள் போட்டி இந்தியா – இலங்கை ‘டை’ appeared first on Dinakaran.

Related Stories: