அதன்பேரில், விரைந்து வந்த போலீசார், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் அரிவாள் ஒன்று கிடந்தது. அதை, போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இறந்த சிறுவன் யார் என விசாரணை நடத்தினர். அதில், எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) வெள்ளை சஞ்சய் (17) என்றும், இவன் மீது பல்வேறு வழக்குகள் எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
முன்விரோதம் காரணமாக யாரேனும் இவனை கொலை செய்தார்களா, என அவனது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சஞ்சய் உடன் எப்போது ஒன்றாக சுற்றி வரும் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சந்தோஷ் மற்றம் சக்திவேல் ஆகியோர் மீது எங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் சந்தோஷ் மற்றும் சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் உடல் கைப்பற்றப்பட்ட காசி திரையரங்கம் அருகே உள்ள அடையாறு ஆற்றின் மேம்பாலத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.