அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

 

தேன்கனிக்கோட்டை, ஆக.1: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள டி.கொத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு, தேன்கனிக்கோட்டை கனரா வங்கி சார்பில் ₹40 ஆயிரம் கல்வி உதவி தொகை மற்றும் பள்ளிக்கு ₹60 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது. அதே போல், முன்னாள் மாணவர் வேணுகோபால், ஒரு ஸ்மார்ட் போர்டை வழங்கினார். விழாவில், கனரா வங்கி கிளை மேலாளர் சுவாதி மற்றும் வங்கி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் முனிரெட்டி, ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: