கோயம்பேடு முதல் ஆவடி வரை ரூ80.48 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து: மெட்ரோ ரயில்வே நிறுவனம் தகவல்


சென்னை: மெட்ரோ ரயில்வே நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கோயம்பேட்டில் இருந்து பாடி புதுநகர், அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயல் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் அறிமுகம் செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் RITES நிறுவனத்திற்கு ரூ80.48 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது. இதற்கான ஏற்பு கடிதம் நிறுவனத்திற்கு கடந்த ஜூன் 11ம் தேதி வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் மற்றும் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர், மற்றும் RITES நிறுவனத்தின் சார்பாக சுதீப் குமார் குப்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வழித்தடம் தோராயமாக 16 கி.மீ நீளத்திற்கு 15 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன் அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. விரிவான திட்ட அறிக்கை ஆய்வுக்குப் பிறகு, நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும்.

The post கோயம்பேடு முதல் ஆவடி வரை ரூ80.48 லட்சத்துக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்து: மெட்ரோ ரயில்வே நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: