இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே தொகுதிக்கு 10 திட்டங்களை செயல்படுத்துகிறோம். விருப்பு வெறுப்பு இன்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத்துறை சிறந்து விளங்கி
வருகிறது. அறநிலையத்துறை அறிவுத் துறையாகவும் செயல்படுகிறது. 3ஆண்டு திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிகளில் இலவச கல்வி தரப்படுகிறது.
1400 கோயில்களில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். இறை பணியோடு சேர்த்து கல்விப்பணியும் செய்து வருகிறோம். ரூ.5,000 கோடியிலான கோயில் சொத்துகளை மீட்டு இருக்கிறோம். சாதி, மதம் என்று எதுவுமே மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. கல்விதான் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாத சொத்து. கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி கோவையில் தொடங்கப்படும். புதிய கண்டுபிடிப்பு, பேச்சுத் திறன், எழுத்துத் திறனை மாரைவாகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை மறுகொள்ள வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.