இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், அந்நாட்டில் உள்ள காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதியில் பி 475, பி 481 ஆகிய கடற்படை ரோந்து படகு / கப்பல் மூலம் ஜனவரி 24, ஜனவரி 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இலங்கை கடற்படை சார்பாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மூலம் அந்நாட்டு அனைத்து மீனவ சங்கங்களுக்கும் அறிவிப்பும் விடுத்துள்ளனர். இந்நிலையில், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் சர்வதேச எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம், என மீன்வளத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி.! எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.
