முல்லைப்பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகு, உச்சநீதிமன்றம் 2014ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி இருப்பதையும் 136 அடியில் இருந்து 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த உத்தரவு பிறப்பித்துள்ளதையும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அணைக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் இதனை கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post முல்லைப்பெரியாறு அணையை நிபுணர் குழு மூலம் மீண்டும் ஆய்வு செய்ய கோரிய மனுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!! appeared first on Dinakaran.
