அஞ்சல் துறை சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஊர்வலம்

 

தூத்துக்குடி, ஜூலை 31: தூத்துக்குடியில் அஞ்சல் துறை சார்பில் உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.  இந்திய உடல் உறுப்பு தான தினம், ஆக.3ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் தூத்துக்குடி கோட்ட அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் இருந்து தொடங்கியது.

இந்த ஊர்வலத்தில் உறுப்பு தான உறுதிமொழி எடுக்கப்பட்டவுடன் துணை கோட்ட கண்காணிப்பாளர் ஹேமாவதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு சென்றனர். இந்த ஊர்வலம், தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி திருச்செந்தூர் மெயின் ரோடு, சிவந்தாக்குளம் ரோடு, பங்களா தெரு மற்றும் காமராஜ் சாலை வழியாக தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தை வந்தடைந்தது. தூத்துக்குடி உபகோட்ட அஞ்சல் ஆய்வாளர் மீகா நாயகம், தலைமை அஞ்சலக அதிகாரி ராஜா, அஞ்சல் துறை ஊழியர்கள் மற்றும் தபால்காரர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

The post அஞ்சல் துறை சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: