கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் முகாமில் 389 மனுக்கள் வந்தன

 

கிருஷ்ணராயபுரம். ஜூலை 31: கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேங்கல், சித்தலவாய், முத்துரெங்கம்பட்டி ஆகிய ஊராட்சிக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்ரா தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ. சிவகாமசுந்தரி தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

வருவாய் துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை துறை, கல்வி துறை, காவல் துறை, கால்நடைத்துறை என 15 துறைகள் சார்ந்த 44 சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பெற்று கணினியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டது. இம்முகாமில் 500 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 389 மனுக்கள் வருவாய் துறை சம்மந்தமாக வரப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஏடி சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வித்யாவதி, கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, மாவட்ட கவுன்சிலர் நந்தினிதேவி, ஒன்றிய கவுன்சிலர்கள் மோகன்ராஜ், உஷா, ஊராட்சி தலைவர் சேங்கல் அமராவதிபாண்டியன், பழனியப்பன் உட்பட அரசு துறை அதிகாரிகள், அலுவல ர்கள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் முகாமில் 389 மனுக்கள் வந்தன appeared first on Dinakaran.

Related Stories: