ஆடி பண்டிகையையொட்டி ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை அமோகம்

 

ஈரோடு, ஜூலை 31: ஈரோடு ஜவுளி சந்தையில் ஆடி பண்டிகையையொட்டி சில்லரை வர்த்தகம் வழக்கத்தை விட கூடுதலாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி வணிக வளாக மார்க்கெட்டில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஜவுளி சந்தை நடைபெற்று வருகின்றது. ஆடி மாத சீசன் விற்பனையானது கடந்த 3 வாரங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில், ஆடிப்பண்டிகையையொட்டி சில்லரை விற்பனையானது வழக்கத்தை விட கூடுதலாக நடைபெற்றது.

கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்த வியாபாரிகள் வந்திருந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதேபோல், பிளாட்பார கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: ஆடி பண்டிகை சீசன் விற்பனையானது கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனையானது 45 சதவீதம் வரை நடைபெற்றது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சில்லரை வியாபாரிகள் கலந்து கொண்டனர். கேரளாவில் மழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் வரவில்லை. ஆனால், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வருகை தந்திருந்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஆடி பண்டிகையையொட்டி ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Related Stories: