காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க முடிவு..?

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், பெரும்பாலான கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், இன்று மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதமானது நடைபெறவுள்ளது. இந்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் பங்கேற்க இதுவரை ஒரு மாமன்ற உறுப்பினர்கூட கலந்துகொள்ளாததால் நம்பிக்கையில்லா தீர்மானமானது தோல்வியடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பதவி வகித்த சில மாதங்களிலேயே அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர். மேயருக்கு எதிராக உள்ள 22 கவுன்சிலர்களும், ஆதரவாக உள்ள 10 கவுன்சிலர்களும் சுற்றுலா சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

The post காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை புறக்கணிக்க முடிவு..? appeared first on Dinakaran.

Related Stories: