×

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

 

திருப்பூர், ஜூலை 27: திருப்பூர் பிஎன் ரோடு, அண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (22). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் 15 வயது சிறுமியை கடந்த மாதம் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இந்த விவகாரம் குறித்து குழந்தைகள் நல அலுவலகத்திற்கும், சுகாதார துறையினருக்கும் தகவல் கிடைத்தது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை விரிவாக்க அலுவலர் சிவகாமி வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Pocso ,Tirupur ,Karthikeyan ,Tirupur BN Road, Anna Nagar ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் கொடுத்த...