×

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

 

திருப்பூர், செப்.6: திமுகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட வடக்கு மாநகரம் 15 வேலம்பாளையம் பகுதிக்குட்பட்ட 9வது வார்டு நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 9வது வார்டு அவைத்தலைவர் கனகராஜ் தலைமையில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ் குமார், 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 9வது வார்டு செயலாளர் தர், பிரதிநிதிகள் ராமு, சீனிவாசன், பத்மாவதி, சாந்தி, இளைஞரணி பகுதி அமைப்பாளர் ராம்குமார் ஆகியோர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

The post திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tirupur ,Tirupur North District North City 15 Velampalayam ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி