×

சாலை சீரமைப்பு பணி தீவிரம்

 

உடுமலை, நவ. 6: தாராபுரம் நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்ட மடத்துக்குளம் பகுதியில் சில சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டன. இவற்றை சீரமைக்கும் பணியில் மாநில நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உடுமலை- குமரலிங்கம் சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட இதர சாலைகளில் உள்ள பள்ளங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் முதல்வரின் பள்ளமில்லா சாலை, பாதுகாப்பான பயணம் என்ற எண்ணம் நிறைவேற்றப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

The post சாலை சீரமைப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Madathikulam ,Tarapuram ,highway ,State Highway Department ,Kumaralingam ,Dinakaran ,
× RELATED உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை