×

நேந்திரன் பழம் விலை குறைந்ததால் விவசாயிகள் பாதிப்பு

 

பல்லடம், செப்.4: கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான விவசாயிகள் நேந்திரன் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நேந்திரன் வாழை கேரளாவிற்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. ஓணம் பண்டிகையை எதிர்பார்த்து பல விவசாயிகள் நேந்திரன் வாழை சாகுபடி செய்திருந்தனர். அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரு வாரங்கள் முன்பு ஒரு கிலோ 51 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

சமீபத்தில் பெய்த பலத்த மழையால், கேரள மாநிலம், வயநாடு பகுதியில் சில கிராமங்கள் பலத்த சேதம் ஏற்பட்டு உயிர் இழப்பு மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடப்பாண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இதனால் நேந்திரன் விலை குறைந்து வருகிறது. விவசாயிகளிடம் கிலோ 27 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. விலை பாதியாக குறைந்ததால் நேந்திரன் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

The post நேந்திரன் பழம் விலை குறைந்ததால் விவசாயிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Coimbatore ,Tirupur ,Kerala ,Onam festival ,
× RELATED நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய சுங்கச்சாவடியை அகற்ற ஆணை