தேவனூரில் மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் இயந்திரமயமாக்கல்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 27: ஆண்டிமடம் வட்டார ‘அட்மா’ திட்டத்தின் கீழ் மானாவாரி நிலக்கடலை மற்றும் இயந்திரமயமாக்குதல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் தேவனூர் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண்மை துணை அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கி பேசுகையில், ‘அசோஸ்பைரில்லம் , பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம் போன்ற திட திரவ உயிர் உரங்களை வயலில் இடுவதால் நுண்ணுயிர்கள் பெருக்கி மண்வளம் பாதுகாக்கப்பட்டு மகசூல் அதிகரிப்பது; நுண்ணூட்டசத்து விடுவதன் முக்கியத்துவம், மண் ஆய்வுகளின் அடிப்படையில் உரமிடுதல், அரசு திட்டங்கள், மானிய விபரங்கள், வேளாண் கிடங்கில் உள்ள இடுபொருட்கள்களின் விவரம் குறித்தும் விளக்கினார்.

இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி பவுல்துறை, நிலக்கடலை விதைப்பான், நிலக்கடலை அறுவடை செய்யும் கருவி, நிலக்கடலையில் தோல் நீக்கும் கருவி ஆகிய இயந்திரங்கள் குறித்தும் நிலக்கடலை சாகுபடி செய்யும் முறை குறித்தும் விளக்கி, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மானிய விவரங்கள், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் முருகன் பேசினார். முன்னதாக, வரவேற்றுப் பேசிய அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும், விளக்கிப் பேசினார். இதில், தேவனூர் கிராம முன்னோடி விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டனர்.

The post தேவனூரில் மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் இயந்திரமயமாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: