பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

 

கிருஷ்ணராயபுரம், ஜூலை 27: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10-வது வார்டு கவுன்சிலர் தேவி நாகராஜன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டில் அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்ட பணிகள் செய்து தராமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி 10வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தேவி நாகராஜன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேரூராட்சி தலைவர் சௌந்தரப்பிரியா, செயல் அலுவலர் ராஜகோபால், லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் 10வது வார்டு பகுதிக்கு குடிதண்ணிற்காக போர்வெல் அமைத்து தருவதாகவும், சுழற்சி முறையில் பொது சுகாதார கழிப்பறை கட்டி தருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டனர். மேலும் உரிய திட்ட பணிகளை தொடர்ந்து செய்து தருவதாக உறுதி அளித்ததால். போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய நிர்வாகி நாகராஜன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் மகாமுனி, பேரூர் கழக செயலாளர் முருகேசன், பெரியார் இயக்கம். கண்ணன், வார்டு பொதுமக்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: