சேலம் ஜி.ஹெச்சில் டூவீலர் திருட்டு

சேலம், ஜூலை 27: மேட்டூர் பக்கமுள்ள புக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன்(49). இவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரர் முத்துசாமியை நேற்று பார்ப்பதற்காக வந்திருந்தார். அங்குள்ள சித்தாப்பிரிவு அருகில், டூவீலரை நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். அப்போது அவரது டூவீலரை, மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேலம் ஜி.ஹெச்சில் டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: