அழகப்பா பல்கலையில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்

காரைக்குடி, ஜூலை 25: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம், என்.எஸ்.எஸ், என்சிசி மற்றும் சுகாதார மையம் ஆகியவை சார்பில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடந்தது. துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி துவக்கிவைத்து பேசுகையில், ரத்தம் கொடுப்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய செல்கள் உற்பத்தியாகி மன அழுத்தத்தை குறைக்கிறது, என்றார்.

50க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் வழங்கினர். மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ ஆலோசகர் சூசைராஜா, ரத்த வங்கி மருத்துவ அதிகாரி ரசியாபேகம், இந்திய செஞ்சிலுவை கங்க மாவட்ட தலைவர் சுந்தரராமன், பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி ஆனந்தி, பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், பல்கலைக்கழக என்சிசி அதிகாரி லெப்டினட் வைவசுந்தரம், இளையோர் செஞ்சிலுவை சங்க இணை ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

The post அழகப்பா பல்கலையில் ரத்ததான விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: