தமிழ்நாட்டில் தீயணைப்புத்துறையை நவீனமயமாக்க நிதிஒதுக்கீடு: அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, பல்வேறு மாநிலங்களுக்கான பேரிடர் தணிப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான நேற்று ஆய்வு செய்தது. இதையடுத்து மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் புனே நகரங்களில் வெள்ள மேலாண்மைக்கு ரூ. 2514.36 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. 2023ம் ஆண்டு நவம்பர் 27 அன்று சென்னைக்கு ரூ. 561.29 கோடி நிதியை ஏற்கனவே ஒதுக்கி உள்ளது.

அதே போல் அசாம், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.810.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஏற்கனவே 11 மாநிலங்களுக்கு ரூ. 1691.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.470.50 கோடி செலவில் யுவாஆப்தமித்ரா திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளத.

இது நாட்டின் 315 பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் பயிற்சி பெற்ற ஆப்த மித்ரா தன்னார்வலர்கள் 1300 பேரை மாஸ்டர் ட்ரெய்னர்களாகவும், என்சிசி, என்எஸ்எஸ், என்ஒய்கேஎஸ், பாரத சாரணர், வழிகாட்டிகளில் இருந்து 2.37 லட்சம் பேருக்கு பிரத்தியேகமாக பேரிடர் பயிற்சியையும் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 14 மாநிலங்களுக்கு ரூ. 6348 கோடியும், மாநில பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் 6 மாநிலங்களுக்கு ரூ. 672 கோடியும் ஒன்றிய வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 10 மாநிலங்களுக்கு ரூ. 4265 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் தீயணைப்புத்துறையை நவீனமயமாக்க நிதிஒதுக்கீடு: அமித்ஷா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: