ஆனால், பயணிகள் நிழற்குடையின் பின்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. குறிப்பாக நிழற்குடையின் மேற்பகுதி முழுவதும் கருவேல மர கிளைகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நிழற்குடைக்குள் வரும் அபாயம் உள்ளது. மேலும், நிழற்குடை சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே, பயணிகள் நிழற்குடையை சீரமைக்கவும், கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நடுமுனைக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நடுமுனைக்காடு கிராமத்தில் பயணிகள் நிழற்குடையை சூழ்ந்த கருவேலம் appeared first on Dinakaran.