கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரம் 24 மணி நேரத்தில் ரூ.8.1 கோடி நிதி குவிந்தது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் பைடன் அதிபர் வேட்பாளராக களமிறங்கினார். பின்னர் தேர்தல் பிரசாரத்தின் நேரடி விவாதத்தில் அவரது செயல்பாடு, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து அவர் விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. கட்சியில் இருக்கும் செல்வாக்கு மிக்க தலைவர்கள் அழுத்தம் கொடுக்க தொடங் கியதால் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக பைடன் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும் துணை அதிபர் கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக அவர் முன்மொழிந்தார். இந்நிலையில் முன்மொழியப்பட்ட 24 மணி நேரத்தில் கமலா ஹாரீஸ் பிரசார குழுவுக்கு ரூ.8.1 கோடி பிரசார நிதி குவிந்துள்ளது. இது வரலாற்றில் எந்த வேட்பாளரும் பெறாத ஒன்றாகும்.

The post கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரம் 24 மணி நேரத்தில் ரூ.8.1 கோடி நிதி குவிந்தது appeared first on Dinakaran.

Related Stories: