டெல்லி: ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி; மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது மக்களுக்கான பட்ஜெட். ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும். இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரம் அளிக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது.
பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட்டாக உள்ளது. மத்திய நிதியமைச்சர், அவரது குழு மிகச் சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். நாட்டில் உள்ள ஒவ்வொருக்கும் நிரந்தர வருவாய் தரும் பட்ஜெட். நாட்டில் புதிய நடுத்தர வர்க்க மக்களை கொண்டுவரும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதுகல்வியையும் திறமையையும் ஊக்குவிக்கும் பட்ஜெட்.
சிறு குறு வியாபாரிகள், நடுத்தர வர்க்க வியாபாரிகள் அனைவரும் பட்ஜெட்டால் பலனடைவார்கள். வேலைவாய்ப்புகளுக்கு அதிக கவனம் மத்திய பட்ஜெட்டில் வழங்கப்படுகிறது. நிரந்தர மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் உதவும். சமூகத்தின் அனைத்து தரப்பு, ஒவ்வொரு நபர், ஒவ்வொரு வீடும் வளர்ச்சி பெற வேண்டும் என பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முத்ரா கடன் திட்டத்தின் கீழ் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு இரண்டுக்கும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றும். நாட்டில் வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கு, மத்திய பட்ஜெட் பாதை அமைத்து கொடுத்துள்ளது என்று கூறினார்.
The post ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும்: பிரதமர் மோடி பாராட்டு appeared first on Dinakaran.