ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில், சுகாதாரத்துறையின் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், சுகாதார ஆய்வாளர் செந்தில் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு, கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்த முகாமில் திருமங்கலம், சுங்குவார்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு ரத்த அழுத்தம், சக்கரை நோய், காச நோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
The post திருமங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.