விரைவில் அரசாணை வெளியிடப்படும் வனவிலங்கு பட்டியலில் காட்டுப் பன்றி நீக்கம்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நெல்லை: வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றி நீக்கம் தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என நெல்லையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் அலுவலகத்தில் வனத்துறையின் பணிகள் தொடர்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்ட வன அலுவலர்களுடன் அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக அவர் அளித்த பேட்டி: அனைத்து வன உயிரினங்களையும் பாதுகாப்பது வனத்துறையின் கடமை. அதன் அடிப்படையில் யானைகளை பாதுகாக்கும் பணிகயில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்குவது தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மாஞ்சோலை புலிகள் காப்பக பகுதியாக இருப்பதாலும், காப்புக் காடுகள் பட்டியலில் இருப்பதாலும் சூழல் சுற்றுலா அனுமதி வழங்குவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post விரைவில் அரசாணை வெளியிடப்படும் வனவிலங்கு பட்டியலில் காட்டுப் பன்றி நீக்கம்: அமைச்சர் மதிவேந்தன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: