அதேநேரம், கடந்த ஜூலை 16ம் தேதி நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் திடீரென ஈரோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி பணம் தன்னுடையது என உரிமை கோரினார். பிறகு சிபிசிஐடி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோரிய முஸ்தபாவை கடந்த ஜூலை 30ம் தேதி நேரில் அழைத்து 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். ரயில்வே கேன்டீன் வசூலான பணம் என்றும் கோரினார். இருந்தாலும் சிபிசிஐடி போலீசார் ரூ.4 கோடி பணத்திற்கான கணக்கு வழக்குகளை ரயில்வே கேன்டீன் ஒப்பந்ததாரரான முஸ்தபாவிடம் கேட்டு ஆய்வு செய்தனர்.
அதில் முஸ்தபா வங்கி கணக்குகள் மற்றும் அவர் நடத்து ரயில்வே கேன்டீன் வங்கி கணக்குகளில் ரூ.4 கோடி பணம் தொடர்பாக எந்த பரிமாற்றமும் நடைபெற வில்லை என தெரியவந்துள்ளது. கடந்த 5 மாதங்களாக நடந்து வந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பமாக பணத்திற்கு உரிமை கோரியவருக்கு சொந்தமான பணம் இல்லை என உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஏன் தேவையில்லாமல் முஸ்தபா தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி பணம் என்னுடையது என்று கூறினார். அப்படி கூற அவருக்கு நிர்ப்பந்தம் கொடுத்தது யார் என்பது குறித்து சைபர் க்ரைம் உதவியுடன் முஸ்தபா செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதலில் திடீர் திருப்பம் ஈரோடு ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபாவுக்கு சொந்தமான பணம் இல்லை: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.