சில்லி பாயின்ட்…

* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டிலும் வென்றதையடுத்து இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது (இங்கிலாந்து 416 & 425; வெ.இண்டீஸ் 457 & 143). இதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்த இங்கிலாந்து 3 இடம் முன்னேறி 6வது இடத்தை பிடித்தது.

* இட ஒதுக்கீடு சர்ச்சை காரணமாக வங்கதேசத்தில் கலவரம், வன்முறை வெடித்துள்ள நிலையில், இந்த ஆண்டு அக். 3-20 வரை அங்கு நடைபெற உள்ள மகளிர் டி20 உலக கோப்பை போட்டி கேள்விக்குறியாகி உள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

* ஓமன் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து அறிமுக வேகம் சார்லி கேஸல் 5.4 ஓவரில் 21 ரன்னுக்கு 7 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். 2015ல் வங்கதேசத்துக்கு எதிராக தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா படைத்த சாதனை (6/16) முறியடிக்கப்பட்டுள்ளது.

* லங்கா பிரிமியர் லீக் பைனலில் காலே மார்வெல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜாஃப்னா கிங்ஸ் 5 சீசனில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. காலே 20 ஓவரில் 184/6; ஜாஃப்னா 15.4 ஓவரில் 185/1 (ரூஸோ 106*, குசால் மெண்டிஸ் 72*).

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: