இணைந்த கைகளாக இருக்கிறோம் திமுக-காங்கிரசை யாரும் பிரிக்க முடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கலை பிரிவு சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 23ம் ஆண்டு நினைவு தினம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணை தலைவர் மயிலை அசோக், மாநிலச் செயலாளர் சூளை ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் பா.சந்திரசேகர், சங்கு ராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மாநில துணைத்தலைவர் கோபண்ணா, பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், காண்டீபன், ரங்கபாஷியம், எஸ்.ஏ.வாசு, மாநில செயலாளர் அகரம் கோபி, எஸ்.சி.துறை மாநில பொதுச்செயலாளர் ம.வே.மலையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: திமுகவும், காங்கிரசும் பாசிச சக்திகளை விரட்டுவதற்கு இணைந்த கைகளாக செயல்படுகிறது. இதை யாரும் பிரிக்கவும் முடியாது. முறிக்கவும் முடியாது. நாங்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறோம். உதய் மின் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார். இதனால்தான் தற்போது தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்த வேண்டிய நிபந்தனையை ஏற்க வேண்டியதாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post இணைந்த கைகளாக இருக்கிறோம் திமுக-காங்கிரசை யாரும் பிரிக்க முடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: