கிரிவலம் சென்ற பக்தர் சாவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர் கிரிவலம் சென்றார். ஈசானிய மயானம் எதிரில் அண்ணா நுழைவாயில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரம் அமர்ந்தார். பின்னர், கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து தண்ணீரை குடித்தார். அப்போது, திடீரென மயக்கமாகி கீழே விழுந்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ேபாலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இறந்தவர் யார்? என்பதை அடையாளம் காண முடியவில்லை. அவரது சட்டை பாக்கெட்டில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பயணம் செய்ததற்கான பஸ் டிக்கெட் மட்டும் இருந்தது. மேலும், ரூ.180 வைத்திருந்தார். அவரிடம் செல்போன் உள்ளிட்ட எதுவும் இல்லை. இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கிரிவலம் சென்ற பக்தர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: