காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை : காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களது வளமார்ந்த அனுபவமும், மதிநுட்பம் கொண்ட தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பெரும் பங்காற்றியுள்ளது. சமூகநீதியின் மீது தாங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பும், ஒடுக்கப்பட்டோரை உயர்த்துவதற்கான தங்களது முயற்சிகளும் அனைவருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது.

தங்கள் பயணம் தொடர்ந்து வெற்றியோடும் தாக்கம் செலுத்தும் பங்களிப்புகளுடனும் திகழட்டும். உங்களின் அனுபவமும் திறமையான தலைமையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக அமைந்துள்ளது. சமூக நீதிக்கான உங்களின் அர்ப்பணிப்பு, ஒதுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்கான முயற்சிகள் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன. மேலும் உங்களுடைய முன்னோக்கிய பயணங்கள் தொடர்ச்சியான வெற்றிகளை பெற வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.

The post காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: