1924 ஆம் ஆண்டு பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20ம் தேதி உலக அளவில் செஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாகவும், மாணவர்களிடையே செஸ் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் மாநில அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு 5 முறை செஸ் உலக சாம்பியனும், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவருமான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ஆட்டோகிராஃபுடன் கூடிய செஸ் போர்டுகளை அன்பளிப்பாக வழங்கியதுடன், ‘இந்த சர்வதேச செஸ் தினத்தில், உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
செஸ் என்பது விளையாட்டு என்பதைத் தாண்டி அறிவாற்றல், கவனம், சிக்கலைத் தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்துகிறது. அயராத உழைப்பும், இது போன்ற பல ஈடுபாடுகளும் மாணவர்களுக்கு செஸ் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும். இதன் மூலம் நம் மண்ணில் இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள் என்பது நிச்சயம்’ என குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
The post செஸ் தினத்தில் ஆனந்தின் அன்பளிப்பு! appeared first on Dinakaran.