‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடியை பின் தொடர்வோர் 10 கோடியானது: எலான் மஸ்க் வாழ்த்து

வாஷிங்டன்: உலக அளவில் பல்வேறு சமூக வலை தளங்கள் இருந்தாலும் தங்கள் கருத்துக்களை பதிவிட பிரபலங்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக அது டிவிட்டர் என்ற பெயரில் உலக அளவில் செயல்பட்டு வந்தது. இந்த ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி 2009ம் ஆண்டு இணைந்தார். கட்சி மற்றும் அரசின் அறிவிப்புகளை வெளியிடுவது, பல்வேறு பிரச்னைகள் குறித்த தன் கருத்துக்களை கூறுவது, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வது மற்றும் மக்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவதற்கு எக்ஸ் சமூக வலைதளத்தை மோடி பயன்படுத்துகிறார்.

இதில் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடி என்ற சாதனை எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இப்பட்டியலில் உலகில் அரசியல் தலைவர்களில் பாரக் ஒபாமாவுக்கு அடுத்து 2வது இடத்திலும், ஒட்டுமொத்தமாக 7வது இடத்தில் மோடி உள்ளார். இதற்காக, பிரதமர் மோடிக்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில், அதிகம் பின்பற்றப்படும் உலக தலைவராக இருப்பதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்!’ என வாழ்த்தி எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

The post ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடியை பின் தொடர்வோர் 10 கோடியானது: எலான் மஸ்க் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: