ராணுவ ஹெலிகாப்டர் விபத்து விசாரணை விரைவில் முடியும்: விமானப்படை தளபதி விளக்கம்

ஐதராபாத்: ‘முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படை விசாரணை ஒரு சில வாரங்களில் முடிந்து விடும்,’ என விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தளபதியான விவேக் ராம் சவுதாரி, ஐதராபாத் அருகே துண்டிகலில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் நேற்று நடந்த பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டார். பிறகு அவர் அளித்த பேட்டியில், `முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து, ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமையிலான முப்படைகள் குழுவின் விசாரணை நீதிமன்றம் ஒவ்வொரு கோணத்திலும் விசாரிக்கிறது. அதில் கண்டறியப்பட்டவை, பரிந்துரைகள் குறித்து எதுவும் கூற முடியாது. ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவசரப்பட்டு எதுவும் தெரிவிக்க கூடாது. இந்த விசாரணை ஒரு சில வாரங்களில் முடிந்து விடும். விசாரணை மிகவும் நேர்மையாக நடத்தப்படும்,’’ என்றார். பயிற்சி நிறைவு விழாவில் பேசிய சவுதாரி, `தற்போதைய சூழலில், போரின் தன்மையில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்கின்றன. கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகள் முற்றிலுமாக விலக்கி கொள்ளப்படவில்லை. அப்பகுதியில் சீனாவுடன் மோதல் நீடிக்கிறது. தேவைப்பட்டால் அங்கு கூடுதல் படைகள் அனுப்பப்படும்,’ என்று கூறினார்….

The post ராணுவ ஹெலிகாப்டர் விபத்து விசாரணை விரைவில் முடியும்: விமானப்படை தளபதி விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: