அறந்தாங்கி, அரிமளம் பகுதி பக்தர்கள் பங்கேற்பு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

 

விராலிமலை,ஜூலை 20: ஆடி வெள்ளியை முன்னிட்டு விராலிமலை பகுதி அம்மன் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்து சென்றனர். அம்மன் வழிபாட்டுக்கு சிறந்த மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மனுக்கு உகந்த ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடித்தபசு,ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி பதினெட்டு, ஆடி பௌர்ணமி, என விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மாதத்தில், பெரும்பாலான அம்மன் கோயில்களில் குண்டம், தேர் திருவிழா, சாட்டு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும்.

அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில், கோவில்களில் சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று பால், பழம் உள்ளிட்ட பல்வேறு பளங்கள், திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சர்க்கரை பொங்கல், கூல், சுண்டல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

The post அறந்தாங்கி, அரிமளம் பகுதி பக்தர்கள் பங்கேற்பு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: