கொள்ளிடம் மகாசக்தி மாரியம்மன் கோயில் வருட சிறப்பு பூஜை

 

கொள்ளிடம், ஜூலை 20: கொள்ளிடம் மகாசக்தி மாரியம்மன் கோயில் 38ம் வருட சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே மகா சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. மிகவும் பழமையான இக் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷகம் நடைபெற்றது. இக்கோயிலின் 38வது ஆண்டு சிறப்பு பூஜை ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி ஆலயத்திற்கு முன்பு சிறப்பு யாகம் நடைபெற்றது.

சிறப்பு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்களில் உள்ள புனித நீரைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் கோமதிபார்த்திபன் மற்றும் விழா குழுவினர் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.

The post கொள்ளிடம் மகாசக்தி மாரியம்மன் கோயில் வருட சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: