1980 ஜூலை 20 அன்று மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞர் அணி, கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த அணி, 44 ஆண்டுகளை கடந்து 45ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. அந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக 45ம் ஆண்டு தொடக்க விழா, திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில், அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெற உள்ளது.
விழாவுக்கு இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவையொட்டி, வருவாய் மாவட்ட வாரியாக இளைஞர் அணியின் சமூக வலைதள பக்கங்களையும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைதள பயிற்சியையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சியில் திமுக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்களும், முதல் இரண்டு மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட-மாநகர துணை அமைப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைதள பக்கம்: அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.