உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவிற்கு தயாராகும் பாரீஸ்: 206 நாடுகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

பாரீஸ்: உலகின் மிக பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இன்னும் 6 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர் வீரங்கங்கனைகள் ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் குவிய தொடங்கியுள்ளனர். 33வது ஒலிம்பிக்ஸ் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். அதன்படி பல்வேறு நாடுகளில் இருந்து ஒலிம்பிக்ஸ் திருவிழாவில் பங்கேற்பதற்காக வீரர்கள் பாரீஸ் நகரில் குவிய தொடங்கியுள்ளனர். அங்குள்ள ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான், உருகுவே உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகள் முதல் ஆளாக வந்து சேர்ந்துள்ளனர்.

ஒலிம்பிக்ஸ் கிராமம் மற்றும் அங்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழாவில் இந்தியா சார்பில் தடகளம், பேட்மிட்டன், குத்து சண்டை, வில்வித்தை என 16 வகையான போட்டிகளில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரீஸ் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரிஸ் நகரை ஒட்டிய கிராமத்தில் 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாது 18 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 40 நாடுகளை சேர்ந்த 1750 பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவிற்கு தயாராகும் பாரீஸ்: 206 நாடுகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: