ஐநா: எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியா மிகப்பெரும், நியாயமற்ற அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளதாக ரஷ்யா வேதனை தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்துக்கான ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு ரஷ்யா தலைமை தாங்குகிறது. இதற்காக ரஷ்ய வௌியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நியூயார்க் சென்றுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய செர்ஜி லாவ்ரோவ், “இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. அது தனது சொந்த தேசிய நலன்களை அடிப்படையாக கொண்டு தன் நட்பு நாடுகளை தேர்ந்தெடுக்கும் மிகப்பெரும் சக்தியாக உள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரும், நியாயமற்ற அழுத்தத்துக்கு ஆளாகி வருகிறது” என்று வேதனையை வௌிப்படுத்தினார். மோடியின் ரஷ்ய பயணம் அனைத்து அமைதி முயற்சிகளின் முதுகில் குத்தும் நடவடிக்கை என்ற உக்ரைன் அதிபரின் பேச்சு குறித்து லாவ்ரோவ் கூறும்போது, “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் பேச்சு இந்தியாவை அவமதிக்க கூடிய, அவமானகரமான கருத்து. ஜெலன்ஸ்கியின் பேச்சுக்கு டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரை அழைத்து இந்தியா தன் அதிருப்தியை வௌிப்படுத்தி உள்ளது. இந்தியா எல்லாவற்றையும் மிக சரியாக செய்கிறது” என்று தெரிவித்தார்.
The post எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது: ரஷ்யா ஆதங்கம் appeared first on Dinakaran.