காலிறுதியில் ஈவா லீஸ்

புடாபெஸ்ட்: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ‘கிராண்ட் பிரிக்ஸ் ஓபன்’ டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் நேற்று காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்ற ஆட்டங்கள் நடந்தன. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் பெர்னார்டா பெரா(29வயது, 82வது ரேங்க்), ஜெர்மனியின் ஈவா லீஸ்(22வயது, 129 ரேங்க்) ஆகியோர் மோதினர். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை கடுமையாக போராடிய ஈவா 7-6(8-6) என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து 2வது செட்டில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ஈவா முன்னிலையில் பெற்றார். அப்போது பெரா காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அதனால் ஒரு மணி 30 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் மூலம் ஈவா காலிறுதிக்கு முன்னேறினார். கடைசியாக 2023ம் ஆண்டு அக்டோபரில் ருமேனியாவில் நடந்த டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு, 250 தரவரிசை புள்ளிக்கான போட்டியின் காலிறுதியில் ஈவா விளையாட உள்ளார்.

* நாகல் ஏமாற்றம்
சுவிட்சர்லாந்தில் நார்டியா ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல்(26வயது, 68வது ரேங்க்) உடன் அர்ஜென்டீனாவின் மரியனோ நவோன்(23வயது, 36வது ரேங்க்) மோதினார். அதில் மரியனோ ஒரு மணி 40 நிமிடங்கள் போராடி 6-4, 6-1 என நேர் செட்களில் வெற்றிப்பெற்றார். ஒருவேளை நாகல் வெற்றிப் பெற்றிருந்தால் இன்று நடைபெறும் காலிறுதில் டென்னிஸ் உச்ச நட்சத்திரம் ரஃபேல் நடால்(ஸ்பெயின்) உடன் மோதும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

The post காலிறுதியில் ஈவா லீஸ் appeared first on Dinakaran.

Related Stories: