சிலர் பகவான்களாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் : பிரதமர் மோடியை மறைமுக சாடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் !!

ராய்ப்பூர் : சிலர் பகவான்களாக வேண்டும் என்று ஆசைப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது மறைமுகமாக மோடியை விமர்சிப்பதாக கருதப்படுகிறது. மேலும் முன்னேற்றத்துக்கு எல்லையே இல்லை, சிலர் சூப்பர் மேன்களாக விரும்புவதாகவும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் விஷ்ணுபூரில் தொண்டர்களிடையே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “சூப்பர் மேன் ஆசையோடு அவர்கள் நிற்பதில்லை, தேவர்கள் மற்றும் கடவுள் ஆகவும்கூட விரும்புகிறார்கள்.பகவான் ஆனவுடன் விஸ்வரூபம் எடுக்கவும் சிலர் விரும்புகின்றனர். ஆனால், விஸ்வரூபத்தை விடவும் கடவுள் பெரியதாக மாறுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஒருவர் வளர்ச்சி பெறுவதற்கு முடிவே இல்லை, மேலும் முன்னேற வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.யாராக இருந்தாலும் மேலும் முன்னேற முனைப்பு காட்ட வேண்டும்; ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சிலர் பகவான்களாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் : பிரதமர் மோடியை மறைமுக சாடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் !! appeared first on Dinakaran.

Related Stories: