பன்னாள் அரசு உயர்நிலை பள்ளியில் முப்பெரும் விழா

 

வேதாரண்யம், ஜூலை 18: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா பன்னாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா, தன்முனைப்பு திட்டம் பதவியேற்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா மற்றும் பன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி குழந்தை ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வீரமணி இலக்கிய மன்ற தொடக்க அறிமுக உரையாற்றினார். மாணவர் தன்முனைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வேம்பையன் திட்டத்தைப் பற்றிய நிகழ்வுகளை எடுத்துக் கூறினார். மாணவர் தன் முனைப்பு திட்ட மாணவ தலைவர்களுக்கு வேதாரண்யம் நகர் மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி பதவியேற்பு செய்து வைத்து உரையாற்றினார். தமிழ் கூடல் விழா அறிமுக உரையை ஆசிரியை யூடஸ் சுகிலா, சூழலியலில் தமிழின் பங்கு என்ற தலைப்பில் தேனீ கிருபா பேசினர். ஆசிரியர் தர்மதுரை மற்றும் இளநிலை உதவியாளர் பிரதீபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஆசிரயை சித்ரா நன்றி கூறினார்.

 

The post பன்னாள் அரசு உயர்நிலை பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: