அரசு ஆரம்ப பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

தொண்டி, ஜூலை 17: தொண்டி அருகே கூகுடி அரசு ஆரம்ப பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார். தொண்டி அருகே கூகுடியில் அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை குழந்தைகள் நேயப் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-2013 நிதியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் ரூ.26.75 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய பள்ளி கட்டிடத்தை எம்எல்ஏ கருமாணிக்கம் திறந்து வைத்தார். உடன் ஒன்றிய தலைவர் முகம்மது முக்தார், திமுக ஒன்றிய செயலாளர் ரவி, ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகாராஜா, ஊராட்சி துணை தலைவி ரெத்தின வள்ளி, தலைமை ஆசிரியர் ரவி கலந்து கொண்டனர்.

The post அரசு ஆரம்ப பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: