பெரம்பலூரில் வரும் 21ம்தேதி டிஆர்பி மூலம் இடைநிலை ஆசிரியர் பதவி இடங்களுக்கான போட்டி தேர்வு

 

பெரம்பலூர், ஜூலை 16: பெரம்பலூரில் வரும் 21ம்தேதி டிஆர்பி மூலம் இடைநிலை ஆசிரியர் பதவி இடங்களுக்கான போட்டித்தேர்வு நடக்கிறது. இதில் 291பேர் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் பதவி இடங்களுக்கான போட்டித்தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள 15 அறைகளில், வரும் 21ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இந்தத்தேர்வு ஓஎம்ஆர் சீட்டு முறையில் நடைபெறுகிறது. காலை 10 மணிமுதல் பகல் 1 மணி வரைஎன 3-மணிநேரம் நடைபெறும் இந்த போட்டித் தேர்வுக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் 291 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத்தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள நபர்கள்,தேர்வு நடைபெறும் நாளான வருகிற 21ஆம் தேதி காலை 9:30 மணிக்குள், தேர்வு மையத்திற்குள் கட்டாயம் ஆஜராகும்படி ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நேரத்திற்கு பிறகு தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார் கள். ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர் தகுதி தேர்வு(TET-PAPER-1) டெட் பேப்பர்-1 இல் தேர்ச்சி பெற்ற நபர்கள் மட்டுமே இந்தத்தேர்வில் பங்கேற்க முடியும். இதில் தேர்வுசெய் யப்படுவோர் அரசு பள்ளிக ளில் ஒன்றுமுதல் ஐந்து வகுப்புவரை பணிபுரியத் தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூரில் வரும் 21ம்தேதி டிஆர்பி மூலம் இடைநிலை ஆசிரியர் பதவி இடங்களுக்கான போட்டி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: