ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 16: காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி தின விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக தலைமை ஆசிரியர் ராஜு தலைமையில் காமராஜரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ராதிகா பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் குறித்து பேச்சு, பாட்டு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் ராதிகா பிரபு வழங்கினார். மேலும் காமராஜரின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து சிறப்பு செய்தனர். நிகழ்ச்சியில் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: