தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் காமராஜர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

புதுடெல்லி: காமராஜரின் பிறந்த 122வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மாலை அணிவித்தார். இதையடுத்து அவர் அளித்த பேட்டி: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி டெல்லிவாழ் தமிழ் மக்களுடன் இணைந்து பாஜ தென் இந்திய பிரிவு மற்றும் தமிழ் சங்கத்தினரோடு இணைந்து புகழஞ்சலி செலுத்தி உள்ளோம். காமராஜர் தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தையும் அறிமுகம் படுத்தினார். தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட மதிய உணவு திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதேப்போன்று காமராஜர் காலத்தில் தான் தமிழகத்தில் பல்வேறு அணைக்கட்டுகள், நீர் தேக்கங்கள், பெரிய அணைகள் கட்டப்பட்டது. மேலும் காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் பெரிய நிறுவனங்கள் நிறுவப்பட்டது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் காமராஜர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: