சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் கட்ட இடைக்காலத் தடை

திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானத்தில் ஸ்ரீகோயில் அருகே பஸ்மக்குளம் உள்ளது. பக்தர்கள் உடல் முழுவதும் திருநீறை பூசிக்கொண்டு இந்தக் குளத்தில் குளிப்பார்கள். திருநீறுக்கு மலையாளத்தில் பஸ்மம் என்று பெயர். இதனால் இது பஸ்மக்குளம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தக் குளத்தில் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து குளத்தை வேறு இடத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இதற்காக சபரிமலை விருந்தினர் மாளிகை அருகே குளத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. புதிய பஸ்மக்குளம் கட்டுவது தொடர்பாக சபரிமலை உயர்மட்டக்குழுவிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற தேவசம் போர்டு அமர்வு தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு புதிய பஸ்மக்குளம் கட்டுவதற்கு இரு வாரங்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

The post சபரிமலையில் புதிய பஸ்மக்குளம் கட்ட இடைக்காலத் தடை appeared first on Dinakaran.

Related Stories: